மிஸ் பண்ணீடாதீங்க... இன்று ரேஷன்கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம்... குறைதீர்க்கும் முகாம்!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய உணவு பொருட்கள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ள பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுகளுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ள நிலையில் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சென்னையில் இன்று ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமை குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த முகாமில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்ற பணிகளை செய்யலாம்.
இந்த குறைதீர் முகாம் சென்னையை தொடர்ந்து அடுத்தடுத்து பிற மாவட்டங்களிலும் நடைபெறும். மேலும் இந்த முகாம் மூலமாக ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் செல்போன் நம்பர் மாற்றுதல் போன்ற சேவைகளை செய்து கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!