எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்கத் தயார்... உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுப்பிய கேள்விக்கு, அரசின் திட்டங்கள் குறித்து தன்னை அழைத்தால் எடப்பாடியுடன் விவாதிக்க தான் தயாராக இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “திமுக ஆட்சியில் தொடங்கப்படும் திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்கப்படுவதாக விமர்சனம் எழுகிறது. விமர்சனம் வரத்தான் செய்யும். வேறு யார் பெயரை வைப்பது. யாருடைய பெயர் வைக்க வேண்டுமோ அவரின் பெயரைத் தான் வைக்கிறோம். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும் திமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும் நேரடி விவாதத்திற்கு முதலமைச்சர் தயாரா என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார். இது குறித்த கேள்விக்கு தன்னை அழைத்தால் அவருடன் நான் விவாதிக்க தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!