தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்ப்பு.. இஸ்லாமியர் வீட்டை சோதனையிட்ட என்ஐஏ அதிகாரிகள்!
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத்-உல்-தஹீரிர் அமைப்பினர் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் போலீசார் சந்தேகத்திற்கிடமான இடங்களில் சோதனை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை முதல் கன்னியாகுமரி உள்ளிட்ட 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் நாகர்கோவில் இளங்கடை தெற்கு புதுத்தெரு பகுதியில் வசிக்கும் முகமது அலி என்கிற அலி அலிம்ஷாவிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இளங்கடை பகுதியில் வீடு தேடி 2 மணி நேரத்துக்குப் பிறகு முகமது அமீர் குடியிருந்த வாடகை வீடு கிடைத்தது. அப்போது அவர் அங்கு இல்லை. அவரது மனைவியிடம் என்ஐஏ அதிகாரிகள் அலி அலிம்ஷாவின் வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன், ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்பகுதி மக்களிடம் கேட்டபோது அலி ஆலிம்ஷா பற்றி தெரியவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இளங்கடை பகுதிக்கு வாடகைக்கு குடிபெயர்ந்துள்ளார். இதற்கு முன் நாகர்கோவில் வட்டவிளை பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது. அவர் ஹில்புட் உல் தஹீரிர் அமைப்பிற்கு ஆள்சேர்த்தாரா? அவர் எந்தெந்த பகுதிகளில் இருந்து ஆட்களை சேர்த்தார் என்பது குறித்து என்ஐஏ விசாரித்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!