தெலங்கானா மாநிலத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
வங்கக்கடலில் உருவான மோந்தா புயல் நேற்று இரவு ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. தற்போது அந்த புயல் தெலங்கானா நோக்கி நகர்ந்துள்ளதால், அங்கும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

மோந்தா புயலின் தாக்கம் காரணமாக ஹைதராபாத் உட்பட தெலங்கானாவின் பல பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு, மஹபூபாபாத், வாரங்கல் மற்றும் ஹனுமகொண்டா மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மதியம் 1 மணி முதல் இந்த எச்சரிக்கை அமலில் உள்ளது.

அத்துடன், அடிலாபாத், மஞ்சேரியல், நிர்மல், ஜக்தியால், ராஜண்ணா சிர்சில்லா, கரீம்நகர், பெத்தபள்ளி, ஜெயசங்கர் பூபாலபள்ளி, சூர்யாபேட்டை, ஜங்கான், சித்திப்பேட்டை மற்றும் யாதாத்ரி புவனகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் அபாயம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
