மிக கன மழை!! இந்த 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிக்கிறது!!

 
மிக கன மழை!! இந்த 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிக்கிறது!!

கடந்த 15 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிற நிலையில், தற்போது வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனையடுத்து பல மாவட்டங்களில் மீண்டும் தொடர் கனமழை பெய்துவருகிறது. மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். இதிலும் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்

மிக கன மழை!! இந்த 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிக்கிறது!!


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் கனமழை நீட்டிக்கும். குறிப்பகா கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ,கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும். இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.


தமிழகத்தின் பிற மாவட்டங்கள் , புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மிக கன மழை!! இந்த 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிக்கிறது!!

நாளை நவம்பர் 29ம் தேதி திங்கட்கிழமை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ,தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web