பிரசவ வார்டில் ரீல்ஸ்... சர்ச்சை வீடியோவால் பரபரப்பு!

 
நர்ஸ்
 

மத்தியப் பிரதேசம் சத்தர்பூர் மாவட்டம் படாமல்ஹாரா அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில் செவிலியர் ஒருவர் இந்திப் பாடல்களுக்கு ‘ரீல்ஸ்’ எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மருத்துவமனைக்குள், அதுவும் பிரசவ வார்டில் இப்படி நடந்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இணைய பயனர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

காணொலியில் ஒரு செவிலியர் கைப்பேசி வைத்து ரீல்ஸ் செய்ய, மேலும் இரு ஊழியர்கள் அருகில் நின்று இதில் பங்கேற்றுள்ளனர். பணிநேரத்தில் நோயாளிகளின் பாதுகாப்பை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வீடியோ பரவியதும் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தலைமை மருத்துவ அதிகாரி மோகித் ராஜ்புத் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். காணொலியில் இடம்பெற்ற ஊழியர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் மீது உரிய ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!