பெண்ணின் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்ல மறுப்பு.. மாற்று சமூகத்தினர் அராஜகம்!

 
மொத்தக்கல் கிராமம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா மொத்தக்கல் கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் என்பவரின் மனைவி கிளியம்மாள் ( பட்டியலினத்தவர்) என்பவர் உடல் நலக்குறைவால் உயிர் இழந்து உள்ளார். அவரது உடலை நல்லடக்கம் செய்ய வழக்கம்போல் செல்லும் மயானபாதைக்கு  எடுத்துச் சென்ற போது தனிநபர்க்கு சொந்தமான இடத்தில் எடுத்துச் செல்ல கூடாது என மாற்று சமூகத்தைச் சேர்ந்த இடத்தின் உரிமையாளர் மறுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து உறவினர்களும் கிராம மக்களும் உடலை அடக்கம் செய்ய பொது வழியில் நல்லடக்கம் செய்ய வாகனத்தில் சென்ற போது மாற்று சமூகத்தினர் தடுத்துள்ளனர். இதையடுத்து உறவினர்கள் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

காவல்துறையிடம் சமரசத் பேச்சுவார்த்தை ஈடுபட்டத்தின் பெரில் அடுத்து வழக்கமாக எடுத்துச் சென்ற பாதையில் தற்காலிகமாக இறந்தவர் உடலை பொதுமக்களும், உறவினர்களும் எடுத்துச் சென்று மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web