ரெஜினாவின் நிஜ சண்டைக் காட்சிகள்! தேசபக்தியுடன் ஆக்‌ஷன் படமாக ‘பார்டர்’ திரைப்படம்!

 
ரெஜினாவின் நிஜ சண்டைக் காட்சிகள்!  தேசபக்தியுடன் ஆக்‌ஷன் படமாக ‘பார்டர்’ திரைப்படம்!

ரெஜினாவும், அருண் விஜய்யும் புலனாய்வு அதிகாரிகளாக நடிக்கும் ‘பார்டர்’ திரைப்படம் தேசபக்தியுடன் ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைய்லரை நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி இணைந்து வெளியிட்டிருந்த நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது படம்.

ரெஜினாவின் நிஜ சண்டைக் காட்சிகள்!  தேசபக்தியுடன் ஆக்‌ஷன் படமாக ‘பார்டர்’ திரைப்படம்!

நடிகர் அருண் விஜய்க்கு இன்னொரு வெற்றி படமாக அமையும் விதத்தில், படத்தின் காட்சிகளுக்கு அருண் விஜய் கடும் உழைப்பைக் கொடுத்திருப்பது ட்ரைய்லரில் தெரிகிறது. இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து விரைவில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியலில் ‘அருண் விஜய்யின் பார்டர்’ திரைப்படமும் இணைகிறது.
டெல்லி, ஆக்ரா, அஜ்மீர் ஆகிய நகரங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.

அருண் விஜய்யின் காதலியாக அறிமுக நடிகை ஸ்டெபி பட்டேல் நடித்திருக்கிறார்.

ரெஜினாவின் நிஜ சண்டைக் காட்சிகள்!  தேசபக்தியுடன் ஆக்‌ஷன் படமாக ‘பார்டர்’ திரைப்படம்!

நடிகை ரெஜினா கசாண்ட்ரா அருண் விஜயுடன் பணியாற்றும் புலனாய்வு துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். படத்தின் ஹைலைட்டாக ரெஜினாவின் சண்டை காட்சிகள் இருக்கும் என்கிறார்கள். சண்டைக் காட்சிகளுக்காகவே சிறப்பு பயிற்சியும் பெற்று முழு ஈடுபாட்டுடன் நடித்து கொடுத்திருக்கிறார் ரெஜினா.

From around the web