குளிர்காலத்தில் சரும வறட்சியை போக்க எளிய தீர்வு இதோ!
குளிர்காலம் வந்தாலே பலருக்கும் பெரிய சவாலாக மாறுவது சரும பராமரிப்புதான். வெயில் காலத்தில் எப்படியும் கையாள்வார்கள். ஆனால் குளிர், மழைக் காலங்களில்தான் சருமம் அதிகம் வறண்டு, முகப்பருக்கள், அலர்ஜி போன்ற தொந்தரவுகள் உருவாகின்றன. குறிப்பாக பெண்களுக்கு இந்த பிரச்னைகள் இன்னும் அதிகம். அதிக உணர்திறன் கொண்ட சருமம் இருந்தால், ரசாயனம் கலந்த அழகு சாதனங்களைத் தவிர்ப்பது மிக முக்கியம். முகத்தை அடிக்கடி வெதுவெதுப்பான நீரில் கழுவி, குளிர்ந்த அல்லது அதிக சூடான நீரைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

முகம் கழுவிய உடனே தாமதிக்காமல் மாய்ஸரைசர் தடவுவது அவசியம். இரவு தூங்குவதற்கு முன் மேக்கப்பை முழுமையாக நீக்கிவிட்டு, மாய்ஸரைசர் அல்லது சிறிதளவு எண்ணெயை தடவி விட்டு உறங்கலாம். ரசாயனங்கள் அதிகம் உள்ள கிரீம்களைவிட, இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை பயன்படுத்துவது சருமத்திற்கு நல்லது. சருமத்தை அழுத்தித் துடைக்காமல், மென்மையான சுத்தமான துணியால் மெதுவாக துடைப்பதே பாதுகாப்பானது.

இதோடு உணவுப்பழக்கத்தையும் சரியாக கவனிக்க வேண்டும். சத்தான உணவுகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிடுங்கள். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சருமத்தை உள்ளிருந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும். நீர் ஆகாரங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிறிய கவனமே குளிர்காலத்திலும் சருமத்தை பொலிவுடன், பசுமையுடன் வைத்திருக்க உதவும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
