’குடியரசு தின விழா'.. 'பைகா' பழங்குடியின மக்களுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு!

சத்தீஸ்கரின் கவர்தா பகுதியில் 'பைகா' பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகும், பைகா பழங்குடி மக்கள் வசிக்கும் பல கிராமங்கள் இன்னும் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்கின்றன. இந்நிலையில், சத்தீஸ்கரில் உள்ள பைகா பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 குடும்பங்களை டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரௌபதி முர்மு அழைத்துள்ளார்.
இந்த அழைப்பால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குடியரசு தின விழாவில் பங்கேற்கும் 'பைகா' பழங்குடி குடும்பங்கள் ஜனாதிபதி திரௌபதி முர்முவுடன் மதிய உணவு அருந்துவார்கள். பின்னர், பிரதமர் மாளிகை, நாடாளுமன்றம், டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!