பள்ளியில் நெகிழ்ச்சி... 4 ம் வகுப்பு மாணவிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய பிரியங்கா காந்தி!

 
பிரியங்கா காந்தி

 
கேரள மாநிலத்தில்  பள்ளி மாணவ, மாணவிகளிடையே  அஞ்சலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் முக்கிய பிரமுகர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பும்  திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில்  சில பள்ளிகள்  படிக்கும் மாணவ-மாணவிகளிடம் அஞ்சல் நடைமுறையை ஊக்குவிக்கும் விதமாக தனக்கு பிடித்தவர்களை தேர்வு செய்து வாழ்த்துகள் அட்டைகள் அனுப்பலாம் என அறிவுறுத்தியது.  

பிரியங்கா காந்தி

பள்ளி மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பினர். இந்நிலையில் அரசு பள்ளி ஒன்றில் படித்து வரும் 4ம் வகுப்பு மாணவி  ஸ்ரேயா சபின் என்பவர் வயநாடு பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் பிரியங்கா காந்திக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வாழ்த்து அட்டையை அனுப்பியுள்ளார்.

ராகுல் பிரியங்கா
அனுப்பிவிட்டு அவர் அதனை  மறந்து விட்ட நிலையில் 2 வாரங்களுக்கு பிறகு ஸ்ரேயா பெயரில் அவர் படிக்கும் பள்ளிக்கு கடிதம் ஒன்று வந்த. அந்த கடிதத்தை பிரியங்கா காந்தி எம். பி தனது கைப்பட எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் ஸ்ரேயாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அதில் கிறிஸ்துமஸ் வாழ்த்து மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை பிரியங்கா காந்தி  தெரிவித்திருந்தார். இதனையடுத்து பள்ளியின் தலைமையாசிரியர் அந்த கடிதத்தை மாணவ மாணவிகள் மத்தியில் ஸ்ரேயாவிடம் ஒப்படைத்தார்.  4ம் வகுப்பு மாணவியின் வாழ்த்து கடிதத்திற்கு மதிப்பு அளித்து பிரியங்கா காந்தி பதில் கடிதம் அனுப்பிய சம்பவம் பள்ளி மாணவ மாணவியரிடையே நெகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web