ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் கைவரிசை.. 40 சவரன் தங்க நகை, 90 ஆயிரம் ரூபாய் கொள்ளை!
விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் புகுந்து 40 சவரன் தங்க நகை மற்றும் 90 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை விழுப்புரம் தாலுகா போலீஸார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி மஞ்சு நகரில் வசிப்பவர் மணி என்பவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சற்குணம், ஓய்வு பெற்ற ஆசிரியர். இருவரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, இவர்களது வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் இவர்களுக்கு தொடர்பு கொண்டு, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதாக தெரிவித்தனர்.
மணி-சற்குணம் தம்பதியினர் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டபோது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 40 சவரன் தங்க நகைகள், 90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. இதையடுத்து மணி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆதாரங்களை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!