பைக் ரேஸில் ஈடுபட்ட போது விபரீதம்.. கோர விபத்தில் இரு சிறுவர்கள் துடி துடித்து பலி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் இருந்து ஆவியூர் வரை மூன்று விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் வாகனப் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். திருக்கோவிலூர் 5-வழி சந்திப்பிலிருந்து ஆவியூர் வரை நான்கு வழி சந்திப்பு வழியாகவும், அங்கிருந்து ஆவியூர், வடக்கு நெமிலி, ஆவியூர் வரை வாகனப் பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் 5-வழி சந்திப்பை அடைய கொளப்பாக்கம் சாலையிலும் பந்தயம் ஈடுபட்டனர். இந்த வாகனப் பந்தயத்தின் போது, மோகன்ராஜ் மற்றும் ஹரிஷ் என்ற இரண்டு சிறுவர்கள் அதிவேகமாகச் சென்று கீழே விழுந்தனர். இதில், வாகனத்தில் பயணித்த மோகன்ராஜ் மற்றும் ஹரிஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், திருக்கோவிலூர் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள திருக்கோவிலூர் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். திருக்கோவிலூர் பைபாஸ் பகுதிகளில் இதுபோன்ற இருசக்கர வாகனப் பந்தயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!