எகிறும் எதிர்பார்ப்பு... அதிர போகுது அலங்காநல்லூர்... இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டியை துணைமுதல்வர் உதயநிதி துவக்கி வைக்கிறார்!

 
ஜல்லிக்கட்டு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மதுரை அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கார்த்தியும், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பார்த்திபனும் முதலிடம் பிடித்தார்கள். 

அவனியாபுரம், பாலமேடு மைதானங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காணும் ஆவலில் நிறைய வெளிநாட்டினரும் வந்திருந்து பார்த்து ரசித்தனர். 

இந்நிலையில் இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்க்ட்டு துவங்குகிறது. இன்று காலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியைத் துவங்கி வைக்கிறார். 

ஜல்லிக்கட்டு

இதில் ஏராளமான இளைஞர்கள், காளை உரிமையாளர்கள் ஆர்வமுடன் பதிவு செய்தனர். காளையின் மருத்துவச் சான்றிதழ், காளையின் படம், உரிமையாளர் மற்றும் உதவியாளருடன் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் ஜல்லிக்கட்டு காளையை துன்புறுத்தாமல் விதிகளுக்கு உட்பட்டு போட்டியில் கலந்துக் கொள்வோம் என்ற உறுதிமொழி அளித்த பின்னரே  முன்பதிவு செய்யப்பட்டது.

இதே போன்று மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவில் மாடுபிடி வீரரின் கைபேசி எண் , ஆதார் எண், பெயர், வயது, முகவரி இவைகளை  பதிவேற்றம் செய்த பின்னர் முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜல்லிக்கட்டு
மதுரை மாவட்டத்தில் இன்று ஜனவரி 16ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அவனியாபுரத்திலும், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியிலும் பங்கேற்ற காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க முடியாது. அதே சமயம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளையுடன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web