எகிறும் எதிர்பார்ப்பு... கூடவே செந்தில் பாலாஜி வேற... நாளை ஸ்டாலின் தலைமையில் திமுக பவள விழா!

 
செந்தில்பாலாஜி ஸ்டாலின்

நாளை ஸ்டாலின் தலைமையில் காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா நடைபெற உள்ள நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவருமே நாளை விழாவில் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பேச இருக்கிறார்கள். கூடவே செந்தில் பாலாஜியும் கலந்து கொள்வது ஸ்டாலினை உற்சாகப்படுத்தி இருக்கிறது என்கிறார்கள்.

முதல்வர் உதயநிதி குறித்த கேள்வியின் போது காலம் கனியவில்லை என்ற பதில், செந்தில் பாலாஜியை மனதில் வைத்து தான் என்கிறார்கள் அறிவாலயம் பிரமுகர்கள். இப்போது அமைச்சரவை மாற்றத்திற்கு எந்த இடையூறும் கிடையாது. அப்படியே செந்தில் பாலாஜிக்கும் அமைச்சர் பதவி தந்துவிடலாம். கூடவே உதயநிதியின் இலாகாவையும் மாற்றிவிடலாம் என்று இதுநாள் வரை காத்திருந்தார் முதல்வர். 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் இப்போதில் இருந்தே துவங்கிவிட்டன. 2026 தான் இலக்கு என்று தீர்மானித்து மாநாடு நடத்த நான்கைந்து மாதங்களாகவே முயற்சி செய்து வருகிறார் நடிகர் விஜய். மாநாடு நடத்த இடம் பிடிப்பதே இத்தனை கஷ்டமா என்று நினைக்கும் அளவுக்கு கெத்து காட்டி வருகிறது திமுக.

தமிழகத்தில் எப்போதும் அதிமுக, திமுக என இருபெரும் கட்சிகளின் ஆட்சியே தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஆட்சியில் பங்கு என்கிற பேச்சு இப்போது வலுத்திருக்கிறது. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி ஒற்றை எண்ணிக்கையில் இருக்கிற கோஷ்டி தலைவர்களுக்கு சீட் கிடைத்தால் போதும் என்று பல வருடங்களாகவே திமுகவை சார்ந்தே இருந்து வருகிறது.

திமுக

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்று முடிவெடுத்து கிட்டத்தட்ட ஒரு வருடமாகி விட்டது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், கஞ்சா புழக்கம் அதிகரிப்பு, நடுவில் சவுக்கு சங்கர் உதயநிதி துணைமுதல்வர் பதவி குறித்து பேசியது, இளைஞர் அணி மாநாடு வேறு தேதிக்கு மாற்றப்பட்டது, இதற்கிடையே ஆடி மாதம் இடையூறாய் வந்தது. இப்போது புரட்டாசி மாதம் என்று ஒவ்வொரு  முறையும் தள்ளி போய்க் கொண்டே இருக்கிறது என்பதால் தான் இன்னும் கனியவில்லை என்று முதல்வர் கூறியதாக கோடிட்டு காட்டுகிறார்கள்.  ஒவ்வொரு முறை எதிர்பார்த்து, ஏமாற்றம் அளித்த செந்தில் பாலாஜியின் ஜாமீனும் நடந்து விட்டது. ஆனாலும் நாளை காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள திமுக பவளவிழா பொதுக்கூட்டத்திலும் உதயநிதியின் துணை முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகாது என்று பந்தயம் கட்டுகிறார்கள். 

முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து விட்டு தமிழகம் திரும்பியதும், ஐப்பசியில் சுபமுகூர்த்த நாளில் தான் உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி வழங்கப்படும் என்றும் காதைக் கடிக்கிறார்கள். அதே சமயம் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்படியாக லிஸ்ட் ரெடி செய்திருக்கிறார் முதல்வர் என்கிறார்கள். 

 பவள விழா பொதுக்கூட்டம்

நாளை காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளைய விழாவில் ஒரே மேடையில் திருமாவும், ஸ்டாலினும் பேசுகிறார்கள். ஆட்சியில் பங்கு, திமுக, அதிமுகவை நம்பி விடுதலை சிறுத்தைகள் கிடையாது, நாலு படம் நடிச்சவங்களுக்கு எல்லாம் துணை முதல்வர் பதவி போன்ற அத்தனை சர்ச்சைகளுக்கும் நாளை முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். செந்தில் பாலாஜி தற்போது வெளிவந்திருக்கும் நிலையில், புது தெம்புடன் திமுக பாய்ச்சலில் இருக்கிறது என்றும், திருமா பஞ்சாயத்து எல்லாம் இந்த உற்சாகத்தில் காணாம போய்விடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கோடிட்டு காட்டுகிறார்கள். 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web