எகிறும் எதிர்பார்ப்பு... வியூகம் எல்லாம் ரெடி... இன்று தவெக 3ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு!

இன்று நடிகர் விஜய்யின் தவெக 3ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று அறிவித்து, அதை நோக்கிய தன்னுடைய பயணத்தை முறையாக திட்டமிட்டு, ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்து வருகிறார் நடிகர் விஜய்.
ஒரு பக்கம் ஜனநாயகன் பட ஷூட்டிங், அப்படியே பரந்தூர் விசிட் அடித்து மக்களுக்கு ஆதரவு, இன்னொரு பக்கம் பூத் கமிட்டி ஆட்கள் வரை இப்போதே தேர்வு செய்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.
இடைத்தேர்தலை எல்லாம் தள்ளி ஒதுக்கி வைத்து விட்டு, முழு மூச்சில் 2026 தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளில் தவெக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுகவைத் தவிர பிற கட்சிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்களைப் பெரிதாக கண்டுக்கொள்ளாத நிலையில், தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் பல இடங்களில் வாக்காளர்கள் பட்டியலை சரிபார்த்து, பெயர் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தது அவர்களது களப்பணியை காட்டியது.
இந்நிலையில் தவெக தனது கட்சியை வலுப்படுத்தவும் , கட்சிப் பணிகளை விரைவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 234 சட்டமன்றத் தொகுதிகளை 120 கட்சி மாவட்டங்களாகப் பிரித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்டச் செயலாளர், ஒரு இணைச் செயலாளர், ஒரு பொருளாளர், இரண்டு துணைச் செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய நிர்வாகிகள் குழு அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே ஜனவரி 24ம் தேதி கோவை, சேலம், ஈரோடு உட்பட 19 கட்சி மாவட்டங்களுக்கான பட்டியலை அக்கட்சி அறிவித்தது. இதை தொடர்ந்து ஜனவரி 29ம் தேதி நேற்று புதன்கிழமை சென்னை, மதுரை உட்பட மேலும் 19 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் இதர நிர்வாகிகளை நியமிப்பதாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அறிவித்தது.
இந்நிலையில், தவெக மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பான 3 வது பட்டியல் இன்று ஜனவரி 31ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 கட்டங்களாக 38 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!