எகிறும் எதிர்பார்ப்பு... மத்திய பட்ஜெட்டில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?!

நாளை பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார். வழக்கம் போலவே இந்த வருடமும் பட்ஜெட் தாக்கலுக்கு முன் வருமான வரி உள்ளிட்ட விஷயங்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த முறை ரயில்வே, தேசத்தின் பாதுகாப்பு, கட்டுமானம் போன்ற துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கட்டுமானம், சுகாதாரம், கல்வி ஆகிய பிரிவுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருட பட்ஜெட்டில் செயற்கை நுண்ணறிவு போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படலாம். சுற்றுலா, போக்குவரத்து போன்ற துறைகளின் மேம்பாட்டுக்காக தொழில்நுப்ட அம்சங்களை அதிகமான அளவில் பயன்படுத்தவும் அதற்கு அதிக நிதி ஒதுக்கவும் வாய்ப்பு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பெண்கள், கிராம புற மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் நிதியுதவி உயர்வு அல்லது பெண்களுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
வழக்கம்போலவே இந்த முறையும் பட்ஜெட் மீது அரசு ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி நிலுவைத் தொகை, சம்பள கணக்கீட்டில் மாற்றம் போன்ற அறிவிப்புகளை எதிர்பார்க்கின்றனர்.
பொதுவாகவே, இளைஞர்கள், பெண்கள், முதியோர் நலன், விவசாயிகள் மேம்பாடு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது, புதிய திட்டங்களை அறிவிப்பது, அதிக நிதி ஒதுக்கீடு செலுத்துவது போன்றவற்றில் மோடி அரசு தீவிரமாக இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி, வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் போன்ற திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வாய்ப்பு உள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!