கொரோனா நிரந்தர நோயாக மாறும் அபாயம்! வல்லுனர்கள் எச்சரிக்கை!

 
கொரோனா நிரந்தர நோயாக மாறும் அபாயம்! வல்லுனர்கள் எச்சரிக்கை!


உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் 2வது அலை ஓய்ந்து மூன்றாவது அலை அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இன்னும் இரண்டு மாதங்களில் 3வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளதால் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கொரோனா நிரந்தர நோயாக மாறும் அபாயம்! வல்லுனர்கள் எச்சரிக்கை!


மூன்றாம் அலையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்துங்கள் என உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதனால் தடுப்பூசி போடும் பணி உலகம் முழுவதும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
வைரஸ் உருமாறிக் கொண்டே இருப்பதால் கட்டுப்படுத்துவதில் பெரும் சவால்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா சர்வதேச பரவலிலிருந்து நிரந்தர நோயாக மாறலாம் எனவும் அதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்து வருவதாகவும் நிபுணர்கள் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு வருகின்றனர்.

அதன்படி அமெரிக்கா-நார்வே ஆராய்ச்சி குழு எதிர்காலத்தில் கொரோனா சாதாரண காய்ச்சலைப் போல தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகளைத் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் குழந்தைகளுக்கு தற்போது வரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாததால் அவர்களை அதிகம் தாக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது எனவும் ஆறுதல் அளிக்கின்றனர் மருத்துவர்கள் .

From around the web