மனைவியுடன் ரொமான்ஸ்.. கையும் களவுமாக பிடித்த கணவன்.. வெளுத்து வாங்கிய குடும்பத்தார்!

 
உத்தரபிரதேச இளைஞர்

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் திருமணமான பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார். திருமணமான பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்ட வாலிபர், அந்த பெண்ணை இரவு  வீட்டு மொட்டை மாடியில் தனியாக சந்தித்துள்ளார். இருவரும் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த போது, ​​பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.


அவரை அடித்து உதைத்து தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இனிமேலும் இங்கு வரமாட்டேன்.. என்னை மன்னித்துவிடு.. என அந்த இளைஞர் கதறியுள்ளார். அந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளனர். தடி மற்றும் பெல்ட்களால் தாக்கும் காட்சியை அங்கிருந்த நபர் செல்போனில் பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

போலீஸ்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த தாக்குதலின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானதையடுத்து விசாரணை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை உறுதி செய்துள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web