பகீர்... கழுதைப்பால் வியாபாரத்தில் ரூ100 கோடி மோசடி... !

 
கழுதை

 திருநெல்வேலி மாவட்டம் முக்கடல் கிராமத்தில் வசித்து வருபவர்  பாபு உலகநாதன். இவர்  ‘டாங்கி பேலஸ்’ என்ற பெயரில் கழுதை பண்ணை ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார். இந்த கம்பெனியில்  கூட்டாளிகளாக கிரிசுந்தர், சோனிக், பாலாஜி, டாக்டர் ரமேஷ் ஆகியோரை இணைத்துக்கொண்டு ஒரு லிட்டர் கழுதைப்பால் ரூ1600 முதல் ரூ1800 க்கு விற்பனை செய்யப்படும் என  விளம்பரம் செய்தார். தொடர்ந்து யூடியூப் சேனல்களில் தனக்கு அதிக அளவில் கழுதைப்பால் கேட்டு ஆர்டர்கள் வருவதாகவும், ஆனால் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்ய முடியவில்லை எனவும் வீடியோ வெளியிட்டு மக்களை நம்ப வைத்தனர். கழுதை பால் வியாபாரத்தில் முதலீடு செய்தால் சாப்ட்வேர் வேலைக்கு செல்வதை காட்டிலும் பெரும் லாபம் சம்பாதிக்கலாம் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.  இதனை உண்மை என நம்பிய பலர் அந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர்.

 

இவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா,  கர்நாடகா  மாநிலங்களை சேர்ந்தவர்கள்.  இவர்களை ஒருங்கிணைத்து  ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு என பல மாநிலங்களில் முதலீட்டாளர்களை கொண்டு பாபு உலகநாதன் குழுவினர், கருத்தரங்கு நடத்தியுள்ளார். இவர்களின் பேச்சால் கவர்ந்திழுக்கப்பட்ட பலர் இதில்  முதலீடு செய்யத் தொடங்கினர்.  உறுப்பினர் சேர்க்கை கட்டணம் என்ற பெயரில் ரூ5 லட்சம் வசூலித்துள்ளனர். மேலும் கழுதைகளுக்கு சிகிச்சைக்கான முதலீடு எனக்கூறி ரூ50000 வாங்கினார். கழுதைகளின் பால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் வைத்தால் அது கெட்டுவிடும் என்பதால், அதனை பாதுகாக்க பிரிட்ஜ் வேண்டும் எனக்கூறி ரூ75 ஆயிரம் முதல் ரூ1.5 லட்சம் வரை வசூலித்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு உறுப்பினரிடம் இருந்தும் ரூ25 லட்சம் முதல் ரூ1.5 கோடி வரை  மொத்தம் சுமார் ரூ100 கோடிக்கு மேல் மோசடி செய்தனர். ஆனால் இதுவரை முதலீட்டாளர்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை  திருப்பி தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஐதராபாத் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தனர்.  

 

கழுதை
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு நெல்லையை மையமாக கொண்டு பாபு உலகநாதன் குழுவினர், டாங்கி பேலஸ் என்ற நிறுவனம் தொடங்கி கழுதைப்பால் உற்பத்தி செய்து விற்பனை செய்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் எனவும், சோனிகா ரெட்டி என்ற பெண் மூலம் யூடியூப்பில் விளம்பரம் செய்தனர். முதலில் எங்களையே கழுதையை வாங்கிகொள்ளும்படி கூறினர்.அதன்பிறகு   தாங்களே விற்பனை செய்வதாக கூறி ஒவ்வொரு கழுதைக்கும்  ரூ80000 முதல் ஒரு லட்சம் வரை வாங்கிக்கொண்டு விற்பனை செய்தனர். பல்வேறு காரணங்கள் கூறி ஒவ்வொரு விவசாயியிடம் இருந்தும் சுமார் ரூ40 லட்சம் வரை பெற்றனர். 3 மாதத்திற்கு ஒரு லிட்டர் பாலுக்கு ரூ1600 வழங்கினர்.

கழுதை


அதன்பிறகு பணம் தருவதை நிறுத்தி விட்டனர். நாங்கள் இழந்த பணத்தை பெற ஒன்றரை ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் மூலம் ரூ100 கோடி வரை பறிகொடுத்தனர். எனவே நெல்லையை மையமாக கொண்டு நடந்த இந்த மோசடியை மேற்கொண்ட பாபு உலகநாதன், யூடியூப்பில் விளம்பரம் செய்து முதலீடு செய்ய வைத்த சோனிகா ரெட்டி, மார்க்கெட்டிங் செய்த கிரி சுந்தர், பாலாஜி, சபரிநாத் ஆகியோரை கைது செய்து பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டு தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web