ரூ1000 உதவித் தொகை!!மாணவர்களே உடனே விண்ணப்பியுங்க!!

 
ரூ1000 உதவித் தொகை!!மாணவர்களே உடனே விண்ணப்பியுங்க!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்வாதாரம் மேம்பட மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக தேசிய வாழ்வாதார சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பழங்குடியின மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரப்பட்டு வருகின்றன.

ரூ1000 உதவித் தொகை!!மாணவர்களே உடனே விண்ணப்பியுங்க!!


இதற்கான இலவச சிறப்புப்பயிற்சி டிசம்பர் முதல் நடைபெறும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களின் தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிட மாணவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் 18 வயது நிறைவு பெற்றவர்களாகவும் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியவதும் அவசியம்.

ரூ1000 உதவித் தொகை!!மாணவர்களே உடனே விண்ணப்பியுங்க!!


சென்னையில் நவம்பர் 30 முதல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கல்வித் தகுதி, மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டை போன்ற சான்றுகளை இணைத்து அனுப்ப வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி


துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தேசிய வாழ்வாதார சேவை மையம்,
3ஆவது தளம், வேலைவாய்ப்பு அலுவலகம்,
56 சாந்தோம் பிரதான சாலை,
சென்னை.

ரூ1000 உதவித் தொகை!!மாணவர்களே உடனே விண்ணப்பியுங்க!!

தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்தவர்களுக்கு பொது ஆங்கிலம், பொது அறிவு மற்றும் தன்னறிவு சோதனை, கணினி அடிப்படை, கணினி செயல்திறன், சுருக்கெழுத்து, தட்டச்சு ஆகியவற்றில் தங்களது திறமைகளை அதிகரித்துக் கொள்ள வாய்ப்புகளும் பயிற்சிகளும் வழங்கப்படும்.இதற்கான எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. மேலும் பயிற்சிக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உதவித்தொகை மற்றும் இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

From around the web