சாலையோரம் கிடந்த ரூ.17.5 லட்சம் பணம்... வருமானவரித் துறையிடம் ஒப்படைத்த பெண் காவலர்!
மதுரையில் சாலையோரத்தில் கிடந்த ரூ.17.5 லட்சம் பணத்தை ஒரு பெண் போலீசில் ஒப்படைத்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
மதுரை விளக்குத்தூண் பகுதி வணிக ரீதியாக பரபரப்பாக இயங்கும் இடம். அங்கு தளவாய் தெருவில் நேற்று மாலை ஒரு மூட்டை சாலையோரத்தில் கிடந்தது. இதைக் கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த செல்வமாலினி (46) என்பவர் சந்தேகத்துடன் அணுகி மூட்டை அருகே சென்று பார்த்த போது, அதன் உள்ளே கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

அவர் உடனே அதை எடுத்து விளக்குத்தூண் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் மூட்டையைத் திறந்து பார்த்த போது அதில் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் இருப்பது உறுதியாகியது.
நேர்மையான செயல் செய்த செல்வமாலினியை போலீசார் பாராட்டினர். பின்னர் அந்தப் பணம் யாருடையது என்பதை கண்டறிய, சம்பவ இடம் மற்றும் அருகிலுள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

அதில் கேரளாவைச் சேர்ந்த பேட்டரி வியாபாரி ஒருவர் மதுரைக்கு வந்த போது, தவறுதலாக அந்த மூட்டையை விட்டுச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் பணத்தை வருமானவரித் துறையினரிடம் ஒப்படைத்தனர். பணத்தின் உரிமை மற்றும் அதற்கான ஆவணங்கள் குறித்து தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
