முதல்வர் நிவாரணம்... கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் !

 
கும்பமேளா


 
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் நேற்று ஜனவரி 29ம் தேதி வியாழக்கிழமை தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில்  லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வந்தனர்.  இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த அவர்கள் பிரயாக்ராஜ் நகரில் உள்ள ஸ்வரூப் ராணி நெஹ்ரு மருத்துவமனை, மோதி லால் நேரு மருத்துவமனை, பிரயாக்ராஜ் மாவட்ட  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனையடுத்து, கும்பமேளா கூட்ட நெரிசல் விபத்து குறித்து டிஐஜி வைபவ் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

கும்பமேளா


அதன்படி,  உயிரிழந்த 30 பேரில் 25 பேர் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அவர்களில் 4  கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் எனவும், அசாம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர். இன்னும் 5 பேர் யார் என அடையாளம் காணப்படவில்லை. அதைபோல, 60 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநில முதல்வர் இந்த துயர சம்பவத்திற்கான காரணங்களை ஆராய்ந்து, பொறுப்புகளை நிர்ணயிக்க  நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.  மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.  காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் வசதிகள் ஏற்படுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   
இது குறித்து  அவர் ” இந்த சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். உயிரிழந்த 30 பேரின் குடும்பத்தினருக்கு நமது இரங்கல்கள். இத்தனை பேரின் மரணம் மிகவும் துயரமானது. புனித நீராடலுக்காக ஏராளமான பக்தர்கள் பிரயாக்ராஜில் கூடியிருந்தனர். அகாடா சாலையில் ஏற்பட்ட இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 30 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கப்படும். நாம் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும்” எனவும் உறுதியளித்தார் .

நடந்தது என்ன? மகா கும்பமேளா கூட்ட நெரிசலும், உயிரிழப்புகளும்... முழு தகவல்கள்!

இதற்கு பலரும் இரங்கலை தெரிவித்தும் மற்றோரு பக்கம் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இச்சம்பவம் குறித்து   “மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. VIPகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தல், நிர்வாகத்தை விட சுய விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்துதல் இவைகளை  சுட்டிக்காட்டி, மத்திய மற்றும் மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.  பல கோடி ரூபாய் செலவிட்டும், இவ்வளவு மோசமான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்” என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web