மாதம் தோறும் ரூ3000/- ! ஸ்டாலினை முந்திய கெஜ்ரிவால்!

 
மாதம் தோறும் ரூ3000/- ! ஸ்டாலினை முந்திய கெஜ்ரிவால்!


தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் அவரது செயல்பாடுகள் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. பல நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. மற்ற மாநிலங்களுக்கு முன்னுதராணமாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது கோவாவில் 2022 பிப்ரவரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து அங்குள்ள அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

மாதம் தோறும் ரூ3000/- ! ஸ்டாலினை முந்திய கெஜ்ரிவால்!


இந்நிலையில், டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். “அதில் கொரோனா காரணமாக தொழிலாளர்கள் பலரும் வேலை இழந்துள்ளனர். கோவாவில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், வேலையில்லாதவர்க்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும்.

அதிகபட்சம் ரூ. 5,000 வரை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கோவா இளைஞர்களுக்கு அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். 80 சதவீத வேலைவாய்ப்பு கோவா இளைஞர்களுக்கு ஒதுக்கித் தரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web