மின் இணைப்பு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம்.. மின்வாரிய ஊழியர்கள் இருவர் அதிரடியாக கைது!
சேலம் புதுசாலையை அடுத்த மல்லமூப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை காமநாயக்கன்பட்டியை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் புதிய மீட்டர் பொருத்துவதற்காக அணுகினார். இதற்கு போர்மேன் ராதாகிருஷ்ணன் 1,000 மற்றும் கமர்ஷியல் இன்ஸ்பெக்டர் மணி ரூ. 3,000 மணிவண்ணனிடம் லஞ்சம் கேட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மணிவண்ணன், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மணிவண்ணன் கொடுத்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் இன்று காலை சாதாரண உடையில் மல்லமூப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றனர்.
அதன்பின், மணிவண்ணனிடம் பணம் பெறும்போது கமர்ஷியல் இன்ஸ்பெக்டர் மணி, போர்மேன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கையும் களவுமாக பிடிபட்டனர். இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் மின் இணைப்பு வழங்க 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!