புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ரூ5 லட்சம் மதுபாட்டில்கள் கடத்தல்...தட்டி தூக்கிய காவல்துறை!

 
மதுபாட்டில்கள்


 நாளையுடன் 2024 ம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில்  காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னை அண்ணாநகர் பகுதிக்கு கார் மூலம் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

மதுபாட்டில்கள்

அதன் அடிப்படையில் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில்  நள்ளிரவு போலீசார் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை மடக்கி பிடித்து சோதனையிட்டபோது அதில் ஏராளமான புதுச்சேரி மதுபான பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது.  தொடர்ந்து காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், மதுபான பாட்டில்களை கடத்தி வந்தது வில்லியனூர் பகுதியில் வசித்து வரும் 42 வயது   தாமோதரன்  என்பது  தெரிய வந்தது.

துணிகரம்! டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை!


புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுச்சேரியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை கடத்திக்கொண்டு, அவர் சென்னை அண்ணாநகர் பகுதியில் விற்பனைக்கு எடுத்துச் செல்வதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தாமோதரனை கைது செய்த விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் செங்கல்பட்டு மதுவிலக்கு போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web