பள்ளியில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்துக்கு ரூ5லட்சம் நிவாரண உதவி... முதல்வர் அறிவிப்பு!

 
ரமணி

 தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தவர் செல்வி ரமணி. இவருக்கு வயது 25. இவர்  இன்று நவம்பர் 20ம் தேதி  காலை பள்ளி வளாகத்தில் இருந்தபோது மதன்குமார் என்ற இளைஞரால்  கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

ரமணி

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக  பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை  உயிரிழந்த ஆசிரியை  குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க அனுப்பிவைத்தேன். பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு  வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணையின் படி  விரைவில் குற்றவாளிக்கு  தண்டனை பெற்றுத்தரப்படும். கிராமப்புறப் பகுதியில் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட செல்வி ரமணியின் உயிரிழப்பு பள்ளிக் கல்வித் துறைக்கும். சக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

முதல்வர் ஸ்டாலின்

செல்வி ரமணி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்கள். சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன்  செல்வி ரமணி அவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web