ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை எதிர்காலத்தில் மறுக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

 
ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை எதிர்காலத்தில் மறுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 52 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 58 இடங்களில் அனுமதி கோரப்பட்ட நிலையில், 6 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்தனர். ஆண்டுதோறும் அக்டோபர் 12-ம் தேதி விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நாடு முழுவதும் பேரணி நடத்துவது வழக்கம்.இந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி தமிழகத்தில் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆர்எஸ்எஸ்

இதற்காக தமிழகத்தில் 58 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கோரி தமிழக காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி 42 இடங்களில் அனுமதி அளித்த போலீஸார், 16 இடங்களில் அனுமதி மறுத்துள்ளனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி, “உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பின்னரும் நீதிமன்ற அவமதிப்பு மறுக்கப்படுகிறது.எதிர்காலத்தில் ஆர்எஸ்எஸ் பேரணியை மறுக்கக்கூடாது.

உயர்நீதிமன்றம்

அவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார் கடுமையாக. இதையடுத்து, அனுமதி மறுக்கப்பட்ட 16 இடங்களில் 10 இடங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 6 இடங்களில் சில காரணங்களால் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தமிழகத்தில் 52 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 6 இடங்களில் உரிய பாதுகாப்பு மற்றும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் பேரணிக்கு அனுமதிக்க தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web