தமிழகத்தில் ஆர்.டி.இ மாணவர் சேர்க்கை இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

 
ஆட் டி இ மாணவர்

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டம் (RTE) 2009-ன் கீழ், 2025–26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆர்.டி.இ சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று அக்டோபர் 9ம் தேதி முதல் தொடங்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு, தமிழகத்தின் நிலுவையில் இருந்த சுமார் ரூ.700 கோடி ஆர்.டி.இ இழப்பீட்டு நிதியை விடுவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில், “2025–26 கல்வியாண்டிற்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. மத்திய அரசு விடுவித்த நிதியைத் தொடர்ந்து, ஆர்.டி.இ ஒதுக்கீட்டின் கீழ் தகுதியுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு ஆன்லைன் சேர்க்கை சாளரம் 10 நாட்கள் திறக்கப்படும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை

பள்ளி நிர்வாகம் செய்ய வேண்டியது:

பள்ளி முதல்வர்கள் தகுதியுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு, பெற்றோரின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன் நுழைவு நிலை வகுப்புகளில் உள்ள இடங்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான மாணவர்களின் இறுதிப் பட்டியல் அக்டோபர் 14ம் தேதி அன்று வெளியிடப்படும்.

யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக உள்ள குடும்பங்கள்

குழந்தை ஆர்.டி.இ ஒதுக்கீட்டுக்குத் தகுதியுடையவனாக இருக்க வேண்டும்

பெற்றோர் தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தேவையான ஆவணங்கள்:

குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்

ஆதார் அட்டை நகல்

வருமானச் சான்று

செல்லுபடியாகும் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

ஆட் டி இ மாணவர்

விண்ணப்பிக்கும் முறை:

1. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றோர் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்

2. தனிப்பட்ட, குடும்ப மற்றும் வருமான விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்

3. ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, விருப்பமான பள்ளிகளைத் தேர்வு செய்யலாம்

4. விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் அனைத்து விவரங்களையும் சரிபார்க்க வேண்டும்

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு வெளியீடு – அக்டோபர் 6, 2025

விண்ணப்ப பதிவு தொடக்கம் – அக்டோபர் 9, 2025

பள்ளி இட விவரங்கள் சமர்ப்பிக்கும் கடைசி நாள் – அக்டோபர் 7, 2025

மாணவர் பட்டியல் வெளியீடு – அக்டோபர் 14, 2025

ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்தத் திட்டம் மூலம் கல்வி சமத்துவத்தை மேம்படுத்தும் முயற்சியாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?