Connect with us

அரசியல்

அமுலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்!

Published

on


தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் தேதிகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு குறித்து சென்னையில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் 2 கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9ம் தேதியும் நடைபெறும். அக்டோபர் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவித்துள்ளார்.


செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
செப்டம்பர் 15 முதல் 22 வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யலாம். செப்டம்பர் 23ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். செப்டம்பர் 25ம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம்.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம்.9 மாவட்டங்களில் 27,000 பதவிகளுக்கு 14,573 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பதால் வாக்குச்சீட்டு முறையில் மட்டுமே தேர்தல் நடத்தப்படும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 வகையான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

உள்ளாட்சி தேர்தலை காரணமாக பாதுகாப்பு பணியில் 40000 காவலர்கள் ஈடுபடுத்தப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார். உடனடியாக அமுலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அவற்றை கண்காணிக்கும் பொருட்டு 9 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குற்றம்3 mins ago

2000 கிலோ கடல் வெள்ளரியை மண்டபம் அருகே கைப்பற்றியது இந்திய கடலோர பாதுகாப்பு படை

இந்தியா11 mins ago

இந்தியாவில் 13 மாநிலங்களில் சிரோடைப் II டெங்கு காய்ச்சல் பாதிப்பு!..

ஆன்மிகம்13 mins ago

உங்க வீட்டில் இருந்தபடியே பெளர்ணமி பூஜையில் நீங்களும் கலந்துக்கலாம்! இதைப் படிச்சு பாருங்க!

செய்திகள்31 mins ago

IPL 2021 – இன்றைய ஆட்டம் : பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதல்

செய்திகள்49 mins ago

IPL 2021: புள்ளி பட்டியலில் சிஎஸ்கே முதலிடம்

ஆன்மிகம்59 mins ago

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனம்! தரிசன நேரமும் நீட்டிப்பு!!

அரசியல்1 hour ago

மத்திய அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இன்று கண்டன போராட்டம்

செய்திகள்1 hour ago

இன்று (செப்டம்பர் 20) பெட்ரோல், டீசல் விலை

ஆன்மிகம்3 hours ago

உஷார்!! தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் கிரிவலம் செல்ல தடை!

ஆன்மிகம்3 hours ago

இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்காது…! வீண் அலைச்சல் உண்டாகும்!

இந்தியா2 weeks ago

15 நாட்கள் முழு ஊரடங்கு! மத்திய அரசு அதிரடி!

அரசியல்4 months ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

செய்திகள்2 months ago

அவசரப்படாதீங்க! ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் அதிரடி மாற்றங்கள்!

அரசியல்5 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்5 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்4 months ago

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு!

அரசியல்4 months ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

செய்திகள்3 months ago

தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

அரசியல்3 weeks ago

பள்ளிகளுக்கு வர கட்டாயமில்லை! தமிழக அரசு!

அரசியல்4 months ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

Trending