ரஷ்ய குடியுரிமை.. ரூ.2½ லட்சம் சம்பளம் - வெளிநாட்டினரைக் குறி வைத்து ரஷ்யா ராணுவ ஆள்சேர்ப்பு!
உக்ரைன் மீதான போர் நான்காவது ஆண்டாக நீடித்துவரும் நிலையில், அதன் பரந்த நிலப்பரப்பைப் பாதுகாக்கும் அளவிற்குப் போதுமான வீரர்கள் இல்லாததால் ரஷிய அரசாங்கம், தங்கள் நாட்டில் உள்ள வெளிநாட்டினரைக் குறிவைத்துச் சமூக வலைத்தளங்கள் மூலம் ராணுவத்தில் ஆள்சேர்க்கும் விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது.

ராணுவத்தில் இணையும் வெளிநாட்டினருக்கு ரஷியக் குடியுரிமை உடனடியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு மாதச் சம்பளமாகச் சுமார் ரூ. 2½ லட்சம் (இந்திய மதிப்பில்) வழங்கப்படும் என்றும், அத்துடன் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும் என்றும் ரஷ்யா உறுதியளித்துள்ளது. இதன் மூலம் தற்போது ஆள்சேர்ப்பை ரஷிய ராணுவம் விரைவுபடுத்தியுள்ளது.

ஏற்கனவே, படிப்பு மற்றும் வேலைக்காக ரஷியாவுக்குச் செல்லும் வெளிநாட்டினரைப் போரில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் நிலவும் நிலையில், இந்த ஆள்சேர்ப்பு விளம்பரங்கள் ஒரு ஏமாற்று வேலை என்றும், போர் உத்தியின் ஒரு பகுதி என்றும் பல தரப்பினரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தப் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடான வடகொரியா சுமார் 10 ஆயிரம் வீரர்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
