இன்று ரஷ்ய அதிபர் புதின் டெல்லி வருகை!! மோடி சார்பில் வரவேற்பு!

 
இன்று ரஷ்ய அதிபர் புதின் டெல்லி வருகை!! மோடி சார்பில் வரவேற்பு!


இன்று இந்திய-ரஷிய உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று பிற்பகல் டெல்லி வருகை தருகிறார். இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்.மோடி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இன்று ரஷ்ய அதிபர் புதின் டெல்லி வருகை!! மோடி சார்பில் வரவேற்பு!

இரு நாட்டு தலைவர்களும், உயர்மட்ட குழு, ராணுவ மற்றும் வெளியுறவு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனையடுத்து மோடி-புதின் மட்டும் பங்கு பெறும் நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறுகிறது.
இன்று நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்த பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் கூட்டறிக்கையாக வெளியிடப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று ரஷ்ய அதிபர் புதின் டெல்லி வருகை!! மோடி சார்பில் வரவேற்பு!


இதே நேரத்தில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களின் சந்திப்பும் நிகழ்கிறது. இந்த சந்திப்பில் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web