சபரிமலை தரிசனம்... பக்தர்கள் இந்தப் பாதை வழியே வராதீங்க... வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம்!
கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி சபரிமலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அய்யப்ப பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாரம்பரிய காட்டு வழிப் பயணத்தைத் தவிர்க்குமாறு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சன்னிதானத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் கூடுதல் ஆட்சியர் அருண் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பாரம்பரியமாக அய்யப்ப பக்தர்கள் பயன்படுத்தும் இந்தக் வனப் பகுதிகளில் யானை, சிறுத்தை உட்பட வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. எனவே, பக்தர்களின் பாதுகாப்புக் கருதி இந்தக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வனத்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளபோதும், இந்த விலங்குகளின் நடமாட்டம் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளது.
எனவே, சபரிமலை தரிசனத்துக்கு வரும் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் பாரம்பரிய காட்டு வழிப் பயணத்தைத் தவிர்த்து விட்டு, அனைவரும் நிலக்கல் - பம்பை வழியாகச் சபரிமலைக்கு வருவது சிறந்தது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சபரிமலையில் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசன முன்பதிவு ஆகியவை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து வருவதாகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்க முன்பதிவு செய்த நாளிலேயே தரிசனத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
