இன்று சபரிமலையில் புதிய மேல்சாந்தி தேர்வு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஐப்பசி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்ட நிலையில் இன்று அக்டோபர் 18ம் தேதி சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு 14 பேர், மாளிகைப்புரம் கோயிலுக்கு 13 பேர் ஏற்கனவே நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஒருவர் குடவோலை முறைப்படி புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்படுவார். தேர்வானவர்கள் கார்த்திகை 1ம் தேதி முதல் அடுத்த ஒரு வருடம் கோயிலில் முக்கிய பூஜைகளை நடத்துவர்.
21ம் தேதி சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 22ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார். அவர் 21-ஆம் தேதி இரவு திருவனந்தபுரம் வருகை தந்து, மறுநாள் காலை ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் சென்று பின்னர் கார் மூலம் பம்பையில் செல்லவுள்ளார். அங்கு இருந்து தேவஸ்தான போர்டின் ஜீப்பில் சன்னிதானம் செல்லும் அவர் தரிசனத்துக்குப் பிறகு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுப்பார். பிறகு மாலை 3 மணியளவில் மீண்டும் சன்னிதானத்தில் இருந்து நிலக்கல் சென்று, ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் திரும்புவார்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, வரும் 22ம் தேதி பக்தர்களுக்கு சபரிமலையில் தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அந்த நாள் இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
