சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக 24 மணி நேர சேவை மையம்!
சபரிமலை கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக தேவசம்போர்டு பல ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு தமிழகத்தில் இருந்து செல்வர். இவர்களின் தேவை மற்றும் வசதிகளுக்காக இந்து சமய அறநிலையத்துறை 24 மணி நேர சேவை மையத்தினை திறந்துள்ளது.
அதன்படி ஸ்ரீதர்ம சாஸ்தா (ஐயப்பன்) திருக்கோயிலில் மண்டல பூஜை 15.11.2024 முதல் 26.12.2024 வரையும் மற்றும் மகரவிளக்கு ஜோதி திருவிழா 30.12.2024 முதல் 19.01.2025 வரையும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மையம் 24.01.2025 வரை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இத்தகவல் மையச் சேவையினை கட்டணமில்லா தொலைபேசி எண்களான 044-28339999 5 1800 425 1757 ல் அழைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழக இந்து சமய அறநிலையத்துறை திரு.பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!