புத்தாண்டில் சோகம்... ஐக்கிய அரபு எமிரேட்சில் விமான விபத்து... இந்திய மருத்துவர் உட்பட 2 பேர் பலி!

 
அல் மஜித்

ஐக்கிய அரபு எமிரேட்சில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தனியார் விமானத்தில் சென்றவர் குடும்பத்தினரின் கண் எதிரிலேயே பரிதாபமாக விபத்திற்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து வளர்ந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுலைமான் அல் மஜித் (26). மருத்துவரான இவர் இங்கிலாந்தில் உள்ள கவுண்டி டர்ஹாம் மற்றும் டார்லிங்டன் என்ஹெச்எஸ் அறக்கட்டளையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் சுலைமான் தனது குடும்பத்துடன் விமானத்தில் பறக்க திட்டமிட்டார். இதற்காக சிறிய ரக விமானத்தை வாடகைக்கு எடுத்தார்.

குடும்பத்தினரை அழைத்துச் செல்வதற்கு முன்னதாக தான் மட்டும் ஒருமுறை விமானத்தில் செல்ல சுலைமான் முடிவு செய்திருந்தார். அதன்படி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

விமான விபத்து

விமானத்தை பாகிஸ்தானை சேர்ந்த 26 வயது பெண்மணி ஒருவர் ஓட்டினார். சுலைமான் இணை விமானியாக அருகில் அமர்திருந்தார். இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்தில் சிக்கியது.

இதில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சுலைமான் குடும்பத்தினரின்  கண் முன்பாகவே விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளனாது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web