பண்டிகை நாட்களில் சோகம்... 8 தமிழக மீனவர்கள் கைது... இலங்கை கடற்படை அட்டூழியம்!
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் பண்டிகை காலத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 8 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் பயன்படுத்திய 2 விசை படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
சமீபத்தில் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவத்திற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என மீனவர்கள் நீண்ட காலமாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் அதற்கான தீர்வு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதுவரை கிடைத்தபாடில்லை.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!