“நம்மிடமுள்ள அம்சங்களை நமக்காக செயல்பட விடுங்க” - கிராமோத்சவ விழாவில் சத்குரு பேச்சு

 
சத்குரு ஜக்கி

“நம்மிடமுள்ள அம்சங்களை நமக்காக செயல்பட விடுங்க” என்று ஈஷா கிராமோத்சவத்தின் இறுதி போட்டி விழாவில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினார்.

முன்னதாக கோவை ஆதியோகியில் நேற்று டிசம்பர் 29ம் தேதி, ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. இந்த விழாவில் நம்மிடம் உள்ள அம்சங்கள் நமக்காக செயல்பட நாம் புத்துணர்வாக இருக்க வேண்டும் என சத்குரு பேசினார்.

ஈஷா சார்பில் நடப்பாண்டுக்கான 16வது கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா நடப்பு மாதம் தொடங்கியது.  ஆண்களுக்கு வாலிபால், பெண்களுக்கு த்ரோபால் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கிளஸ்டர்அளவிலான போட்டிகளில் தேர்வான அணிகளுக்கு இடையே மண்டல அளவிலான போட்டிகள் கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, வேலூர் ஆகிய 6 இடங்களில் நடத்தப்பட்டன.

ஈஷா

இதில், 136 அணிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர். இதில் வென்ற அணிகளுக்கு, கடந்த இரு நாட்களாக அரையிறுதிப் போட்டிகள் கோவை ஈஷா ஆதியோகி முன்பு நடைபெற்றது. அரையிறுதியில் வென்ற  அணிகளுக்கு தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டி நேற்று (டிச.29) ஆதியோகி முன்பு, ஈஷா நிறுவனர் சத்குரு முன்னிலையில் நடைபெற்றது.

இதில், ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் கர்நாடக மாநிலம் பனகல் கிராமத்தைச் சேர்ந்த ‘அலிப் ஸ்டார்’ அணி முதலிடம் பிடித்தது. உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி பிரண்ட்ஸ் அணி 2-ம் இடம் பிடித்தது. பெண்களுக்கான த்ரோபால் இறுதிப் போட்டியில், கர்நாடக மாநிலம் மார்கோடு கிராமத்து அணி முதலிடமும், தமிழகத்தின் புள்ளாக்கவுண்டன்புதூர் கிராம அணி 2-ம் இடமும் பிடித்தது.  இறுதிப் போட்டிகளை சத்குரு தொடங்கி வைத்தார். போட்டிகளின் முடிவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், சத்குரு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் வீரேந்திரசேவாக், வெங்கடஷே் பிரசாத், பாரா ஒலிம்பிக் வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி, பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.

ஈஷா யோக மையம்

இந்நிகழ்வில் சத்குரு பேசும்போது, ‘‘புத்திசாலித்தனம், திறமை, உறுதி போன்ற பல அம்சங்கள் நம்மிடம் உள்ளன. அவை நமக்காக செயல்பட வேண்டும் என்றால் நாம் புத்துணர்வாக, உற்சாகமாக இருக்க வேண்டும். நீங்கள் புத்துணர்வாக இல்லையென்றால் எவ்வளவு, பணம், சொத்து, திறமை இருந்தாலும் உங்களால் எதையும் உருவாக்கிட முடியாது. அந்த வகையில்,கிராமங்களில் புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கிராமோத்சவம் நடத்தப்படுகிறது’’என்றார். வீரேந்திரசேவாக் பேசும்போது, ‘‘ நீங்கள் விளையாட்டுக்காக தினமும் 15 நிமிடங்கள் செலவிடுங்கள். விளையாட்டு என்பது மகத்தான ஆசிரியர். அதுகுழுவாக இணைந்து செயல்படுவதை, இக்கட்டான சூழலில் இருந்து வெளியேறுவதை, தோல்வியிலிருந்து மீண்டு எழுவதை நமக்கு கற்றுத் தருகிறது’’என்றார். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web