பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம்... ஐஐஎம் கல்லூரி மாணவர் மரணம்!
![கைலாஷ்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/a0c9ef0aa7636417b0a27080c66cb7d5.png)
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஐஐஎம் மாணவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள், நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இந்திய நிர்வாக மேலாண்மை கல்லூரியில் (ஐஐஎம்) குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நிலேய் கைலாஷ்பாய் (28) எனும் மாணவர் 2ம் ஆண்டு எம்பிஏ படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 4ம் தேதி கைலாஷ்பாய்க்கு 29வது பிறந்தநாள் என்பதால் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த சக மாணவர்களுடன் சேர்ந்து கைலாஷ் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.
அதன் பின்னர் தனது அறைக்கு திரும்பிய போது 2வது மாடியில் இருந்து கைலாஷ்பாய் தவறி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே கைலாஷ் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கைலாஷ் உயிரிழந்த சம்பவம் அடுத்த நாள் காலை தான் பிற மாணவர்களுக்கு தெரிய வந்துள்ளது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கைலாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மாணவன் உயிரிழந்த சம்பவம் கல்லூரி விடுதியில் உள்ள பிற மாணவர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!