சோகம்... சூரியூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை உயிரிழப்பு!

தமிழகம் முழுவதும் நேற்று முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைக்கட்டி வருகிறது. நேற்று மதுரை அவனியாபுரம், இன்று பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
இதே போல் பல்வேறு ஊர்களில் இன்று முதல் ஒரு மாத காலம் வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கல் தினத்தன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருச்சியில் குவிவார்கள். திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களிலிருந்து மாடுகள் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டிற்கான சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்ற நிலையில் திருச்சி திருவளர்சோலையை சேர்ந்த அப்பு என்பவரின் காளை காயமடைந்து உயிரிழந்தது. ஜல்லிக்கட்டில் காயமடைந்த காளைக்கு கால்நடை மருத்துவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளித்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக காளையின் உயிர் பிரிந்தது.
வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளையும், களத்தில் இருந்து வாடிவாசலுக்குள் திடீரென நுழைந்த காளையும் நேருக்கு நேராக முட்டிக்கொண்டதில் திருவளர்சோலை பகுதியைச் சேர்ந்த காளை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!