சோகம்... ரயில் ஏற முயன்றதில் தவறி விழுந்து முதியவர் பலி!

 
ரயில்
முத்துநகா் விரைவு ரயிலில் ஏற முயன்ற முதியவா் ஒருவர் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து முத்துநகா் விரைவு ரயில் 8.45 மணிக்கு புறப்பட்டது. அப்போது, அந்த ரயிலில் முதியவா் ஒருவா் ஓடிச் சென்று ஏற முயன்ற நிலையில், ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் தண்டவாளத்துக்குள் சிக்கி உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.

மகா கும்பமேளா ரயில்

இதனையடுத்து அங்கு நின்றிருந்த போலீசார் அவரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உயிரிழந்த நபரின் சட்டை பையில் இருந்த ரயில்வே காண்ட்ராக்ட் லேபா் யூனியன் அடையாள அட்டை மூலம், அவா் வேலூா் மாவட்டம் ஆம்பூா் வட்டம் செங்கிலி குப்பத்தைச் சோ்ந்த தங்கராஜ் (65) என்பது தெரிய வந்தது. இது குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web