சோகம்... நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானை உயிரிழப்பு!

 
நெல்லை காந்திமதி யானை

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் யானை காந்திமதி, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தது.

திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் வளர்க்கப்பட்டு வந்த யானை காந்திமதி, கடந்த 1985ம் ஆண்டு சங்கரன் பிள்ளை என்பவரால் கோவிலுக்கு வழங்கப்பட்டது. நெல்லையில் பக்தர்களின் அன்பைப் பெற்று வலம் வந்த காந்திமதி யானைக்கு தற்போது 55 வயது.

நெல்லை யானை காந்திமதி

நெல்லையப்பர் கோவிலின் முக்கிய திருவிழாக்களில் சுவாமி சப்பரங்களுக்கு முன்பு அலங்கரிக்கப்பட்டு ஒய்யாமாக நடந்து வந்த காந்திமதி யானையை கோவிலிலும், திருவிழா காலங்களில் நான்கு ரத வீதிகளிலும் மக்கள் அன்பை செலுத்தி ரசித்துவந்தனர்.

சுதந்திர தினம், குடியரசு தினங்களில் தேசியக்கொடிக்கு காந்திமதி யானை சத்தமிட்டு மரியாதை செலுத்துவதை பார்க்கவே அத்தனை பரவசமாகயிருக்கும். இந்நிலையில் கடந்த 2020ல் காந்திமதி யானைக்கு பின்னங்கால்களில் மூட்டு பகுதியில் ஏற்பட்ட தசை பாதிப்பு காரணமாக அதனால் அதிக நேரம் நிற்கவோ நடக்கவோ முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து திருவிழா காலங்களில் யானை காந்திமதி அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக நான்கு ரத வீதிகளில் வலம் வந்து கொண்டிருந்தது.

அதிகாலை கஜ பூஜைகளுக்கும், இரவு பள்ளியறை பூஜைகளுக்கும் கோவிலை சுற்றி காந்திமதி யானை வலம் வரும். இந்நிலையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், பன்முக கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள், வன கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் தொடர்ந்து வலி நிவாரணிகள், சத்து மருந்துகள், தசை பாதிப்பை சரி செய்யும் மருந்துகள் உள்ளிட்டவற்றை காந்திமதி யானைக்கு தொடர்ந்து வழங்கி வந்தனர். 

நெல்லை யானை காந்திமதி

இந்நிலையில் கடந்த 40 நாட்களாக தசை பாதிப்பு அதிகமான காரணத்தினால் யானை மிகவும் அவதியுற்று வந்த யானை, நேற்று முன் தினம் இரவு நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருந்த நிலையில், வலி தாங்காமல் அப்படியே சாய்ந்து படுத்து விட்டது. நேற்று காலை யானையை எழுப்பும் முயற்சியில் பாகன் ஈடுபட்டபோது அதனால் எழுந்து நிற்க முடியவில்லை. இது குறித்து உடனடியாக எனவே கோவில் நிர்வாகத்தினர் மருத்துவக் குழுவினருக்கு தகவல் அளித்தனர்.

தலைமை மருத்துவர் டாக்டர் முருகன், மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் மனோகரன், மதுரை பன்னோக்கு கால்நடை மருத்துவர் டாக்டர் கலைவாணன், மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் மாதேஷ், டாக்டர் செல்வ மாரியப்பன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் யானை காந்திமதியை நேரில் வந்து ஆய்வு செய்து, யானையின் ரத்த மாதிரிகளை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்  பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் யானை கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தப்பட்ட நிலையில் சிறிது நேரம் நின்றுக் கொண்டிருந்த யானை மீண்டும் நிற்க முடியாமல் படுத்து விட்டது. தொடர்ந்து மருத்துவ குழுவினர் யானையை எழுந்து நிற்க வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், யானை காந்திமதி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web