சோகம்... உயிரிழந்த 7 வயது மகன்... துக்கம் தாளாமல் கடிதம் எழுதி தாயும் , தந்தையும் தற்கொலை!

 
வத்சலா

 விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வசித்து வருபவர்  39 வயது பழனிச்சாமி.  இவருடைய மனைவி 35 வயது வத்சலா. இவர்களுடைய மகன் 7 வயது  சுரேஷ். இதில்  சுரேசுக்கு கடந்த மார்ச் மாதம் திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் பலனின்றி  ஏப்ரல் மாதம் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் பெற்றோர் மிகவும் மனமுடைந்து போயினர். உறவினர்கள் எத்தனை தேற்றியும் மீளவில்லை. இதனையடுத்து  பழனிசாமியின் அண்ணன் முருகேசன், கோவை அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அவர், மகனை இழந்த சோகத்தில் இருக்கும் தனது தம்பி பழனிசாமி மற்றும் வத்சலாவை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேடப்பட்டிக்கு அழைத்து சென்றார்.   அங்கு வந்ததும் பழனிச்சாமி மாணவர்களுக்கு வீட்டில் டியூசன் எடுத்து வந்தார். வத்சலா தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில் வத்சலாவும், பழனிச்சாமியும் நவம்பர் 3ம் தேதி  காந்திபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். ஒரு நாள் முழுவதும் இருவரும்  வெளியே வரவில்லை.  சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறையின் கதவை  பலமுறை தட்டினர்.  திறக்கப்படாததால்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பழனிசாமி - வத்சலா இருவரும் ஆகியோர் வாயில் நுரை தள்ளியபடி சடலமாகக் கிடந்தனர்.

லாட்ஜ் அறையில் நடத்தப்பட்ட சோதனையில்  தம்பதி எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், "எங்களது மகன் சுரேஷ் இல்லாத வாழ்க்கையை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 7 வருடம் நாங்கள் அவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டோம். இப்போது அவன் இல்லாததால், ஒவ்வொரு நிமிடத்தையும் கடக்க ஒவ்வொரு வருடம் போல ஆகிறது. அவனால் எங்களை பார்க்காமல் இருக்க முடியாது. எனவே அவன் இருக்கும் இடத்துக்கே நாங்கள் சென்று விடுகிறோம்" என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web