தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை.. .5 பேர் கைது!

 
திருச்சியில் காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதுமே சமீப காலங்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புகையிலை போன்ற போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், காவல் உதவி கண்காணிப்பாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் அனைத்து உட்கோட்டங்களிலும் தனிப்படை அமைத்து தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். 

கஞ்சா கடத்தல்

அதன்படி தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் நேற்று ஒரே நாளில் 5  கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5பேரை கைது செய்து கஞ்சா மற்றும் ஒரு கத்தியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்படி தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சா

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்த தகவல்களை 95141 44100 என்ற வாட்ஸ் அப் எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும் அவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web