அச்சச்சோ... மீண்டும் ஆட்டத்தை துவங்கிய வனிதா விஜயகுமார்... பிக் பாஸ் பிரபலத்துடன் 4வது திருமணம்!
மீண்டும் வனிதா விஜயகுமார் அடுத்தொரு திருமண பந்தத்திற்குள் நுழைய தயாராகி விட்டார் என தகவல்கள் றெக்கைக்கட்டி பறக்கிறது. இணையதளம் தெறிக்க ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்.
நடிகை வனிதா விஜயகுமார் நடிகர் ஆகாஷ் என்பவருடன் முதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் இரண்டாவதாக ராஜன் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த இரண்டு திருமணங்களும் விவாகரத்தில் தான் முடிந்தது. பின்னர், நடன இயக்குநர் ராபர்ட்டுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. அந்த பந்தமும் நீடிக்காத நிலையில், கடைசியாக பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் வனிதா. அதுவும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
ராபர்ட் மாஸ்டருடன் தற்போது காதலில் இல்லை என்றாலும் இருவரும் நட்பில் தொடர்ந்தார்கள். வனிதாவின் சிபாரிசிலேயே பிக் பாஸ் தமிழ் சீசன் ஒன்றில் ராபர்ட் மாஸ்டர் போட்டியாளராக உள்ளே நுழைந்ததாக பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், கடற்கரையில் ராபர்ட் மாஸ்டரிடம் வனிதா புரோபஸ் செய்யும் வகையில் ஒரு புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார் வனிதா விஜயகுமார். அதில், அக்டோபர் ஐந்தாம் தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த பலரும் ‘இது என்ன தேதி? இவர்கள் மீண்டும் ஒன்று சேர்கிறார்களா? வனிதா மீண்டும் திருமணம் செய்ய இருக்கிறாரா?’ எனக் கேட்டு வருகின்றனர். இன்னொரு தரப்பு ரசிகர்கள், ‘இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கான புரோமோஷனாகதான் இதை செய்கிறார்கள்’ என்று பதிவிட்டு வருகின்றனர்.
எது எப்படியோ? இந்த பந்தமாவது கடைசி வரையில் வனிதாவுக்கு நீடிக்கட்டும் என்று பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!