சட்டவிரோதமாக குவாரி அமைத்து மணல் கடத்தல்.. தப்பியோடிய திமுக பிரமுகருக்கு வலைவீச்சு!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிராமத்தின் கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் உள்ள ஒரு தனியார் இடத்தில் ஒரு கும்பல் கனிம வளங்களை கொள்ளையடிப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த ரகசிய தகவலின் பேரில், திண்டிவனம் துணை ஆட்சியர் திவ்யான் ஷு நிகம் சம்பவ இடத்திற்கு சென்று கிராமங்களை ஆய்வு செய்தார். விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளரான உதயகுமார் அருள்ஜோதிக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரி கட்டப்பட்டு வருவதும், அங்கு பல நூறு டன் மணல் கடத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 டிராக்டர் டிப்பர்கள், 1 மினி லாரி, 1 டிப்பர் லாரி மற்றும் பதிவு செய்யப்படாத ஜே.சி.பி வாகனத்தை துணை ஆட்சியர் பறிமுதல் செய்தார். அந்த வாகனத்தை துணை ஆட்சியர் பார்த்தார், அங்கு வேலை செய்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக கோட்டகுப்பம் துணை ஆட்சியர் காவல்துறை மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கோட்டகுப்பம் உட்கோட்டா டிஎஸ்பி உமா செல்வி மற்றும் மரக்காணம் தாலுகா பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தலைமறைவான நபர்களையும், மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி உதயகுமாரையும் தேடி வருகின்றனர்.
சட்டவிரோதமாக இயங்கி வந்த மணல் குவாரி மற்றும் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக திமுக நிர்வாகி மணல் குவாரி அமைத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!