சனிப்பிரதோஷம்.... சதுரகிரியில் அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள்...!
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மலையேறி சாமி தரிசனம் செய்ய ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பிரதோஷம் மற்றும் பௌர்ணமி நாட்களில் அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனையொட்டி இன்று காலை நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் பக்தர்கள் இரவில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது.
மேலும் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்லவும் வனத்துறை தடை விதித்துள்ளது. பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைக்கான முன்னேற்பாடு மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் விரிவாக செய்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!