தூய்மைப் பணியாளர்கள் 3 நாட்களாக தொடர்ந்து போராட்டம்... புகார் எண் அறிவித்து மாநகராட்சி எச்சரிக்கை!

 
தூய்மைப் பணியாளர்கள் துப்புரவுத் துப்புரவு

பணி நிரந்தரம் கோரி அம்பத்தூர் மண்டலத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வேறு மண்டலங்களில் இருந்து வரும் தூய்மைப் பணியாளர்களைப் பணி செய்யவிடாமல் யாராவது தடுத்தால், அது குறித்துப் புகார் தெரிவிக்கலாம் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

துப்புரவு தொழிலாளி

சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள சுமார் 1,457 தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 3 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் காரணமாக அம்பத்தூர் மண்டலத்தில் குப்பைகள் அள்ளும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

துப்புரவுப் பணியாளர்கள்

இதனால் மாநகராட்சி வேறு மண்டலங்களில் இருந்து தூய்மைப் பணியாளர்களை அழைத்து வந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, வெளியில் இருந்து வரும் தூய்மைப் பணியாளர்களைச் சிலர் பணி செய்யவிடாமல் தடுப்பதாகச் சென்னை மாநகராட்சிக்குப் புகார்கள் வந்தன. இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூய்மைப் பணியாளர்களின் சீருடை அணிந்து பணிக்கு வரும்போது, 3-ஆம் நபர் யாரேனும் தடுக்க முயன்றாலோ, பணியைச் செய்ய விடாமல் தடுத்தாலோ, பொதுமக்கள் உடனே 9445190097 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!