இன்று சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு...!!

 
சங்கரய்யா

சுதந்திரப்போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா நேற்று காலமானார். இவருக்கு வயது 102. இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக  சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார்.  சங்கரய்யா இந்தியாவின் விடுதலைக்கும், இந்திய அரசியலிலும் முக்கிய பங்காற்றிவர். இவரின்   மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் தொண்டர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி  வருகின்றனர். 

இன்று அகவை 100 காணும் கம்யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா!
தோழர் சங்கரய்யாவின் மறைவு அறிந்தவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக  மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார். தமிழக அமைச்சர்களும் உடன் மரியாதை செலுத்தினர். அதன் பிறகு அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.   அங்கு மதிமுக தலைவர் வைகோ  உட்பட பிற  அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக சங்கரய்யா உடல் வைக்கப்பட்டது.

ரூ 10,00,000/- கொரோனா நிவாரண நிதியாக அளித்த சங்கரய்யா!
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றும், தமிழகத்தில் 3  முறை எம்.எல்.ஏவாகவும் தொண்டு ஆற்றியவர். இவரது தொண்டை போற்றும்  வகையில் தோழர் சங்கரய்யாவுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் எனவும், அரசு மரியாதையுடன் அவரது இறுதி ஊர்வலம் நடைபெறும் என தமிழக முதல்வர் நேற்று அரசாணை   வெளியிட்டு இருந்தார்.
அதன்படி இன்று  வியாழக்கிழமை நவம்பர் 16 காலை 10 மணிக்கு  சென்னை பெசன்ட் நகர்  மின்மயனத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியினரின் பேரணியுடன் சங்கரய்யாவின் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. அதன் பிறகு அங்கு சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web