Connect with us

ஆன்மிகம்

16 செல்வங்களையும் அள்ளித் தரும் சஷ்டி விரதம்!! மிஸ் பண்ணீடாதீங்க!!

Published

on

கடவுளை வழிபட எல்லா நாளும் உகந்ததே. நமது வினைப்பயன்களுக்கு ஏற்ப சரியான கால நேரத்தில் கடவுளை வழிபட சிறப்பான பலன்களை பெற முடியும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு.

அந்த வகையில் முருகனை வழிபட சஷ்டி உகந்த நாள். அதிலும் தேய்பிறை சஷ்டி நிறையவே விசேஷம். `சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்’ என்பது அனுபவ மொழி.ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதியிலிருந்து ஆறாம் நாளாக வருவது தேய்பிறை சஷ்டி.

இந்த திருநாளில் குழந்தை செல்வத்திற்காக ஏங்கி காத்திருக்கும் பெண்கள் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபடுவது சிறப்பு. மனமுருகி பிரார்த்தனை செய்திட மன மற்றும் உடல் குறைபாடுகள் நீங்கி குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விரதத்தை தொடர்ந்து மேற்கொள்ள அந்நோய்கள் படிப்படியாக நீங்கி விடும். இத்துடன் நீடித்த செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும்.

இந்த நாளில் வீடுகளில் அதிகாலையில் நீராடி பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீப, தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவேதனம் வைக்கலாம். உணவை தவிர்த்து பூஜையறையில் கந்த சஷ்டி கவசம், முருகன் துதிப்பாடல்கள், ஸ்கந்த குரு கவசம் படிக்கலாம்.

வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், உடல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனத்தில் ஓம் முருகா என்ற மந்திரத்தை ஜெபித்தபடி பணியை தொடரலாம்.

புலால் உணவுகள் மற்றும் போதை வஸ்துக்களை தவிர்க்க வேண்டும். மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

murugan krithigai
murugan krithigai


உடல்நிலை சரியில்லாதவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் இந்த சஷ்டி விரதத்தை நல்ல உணவு மட்டும் உட்கொள்ளலாம். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் சஷ்டிவிரதத்தை கடைப்பிடிக்கலாம்.

முழு நாளும் உபவாசம் இருக்க இயலாதவர்கள் அன்றைய தினம் காலையில் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் முதல் உணவாக எடுத்துக் கொள்ளலாம். இந்த முறையில் தொடர்ந்து விரதம் இருந்திட முருகப்பெருமானின் அருளால் மேலான செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும்.

அரசியல்5 hours ago

மதுரை எம்.பி. சு. வெங்கடேசனை ஒருமையில் பேசியதற்கு கே.என். நேரு வருத்தம்!

கடலூர்6 hours ago

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை

செய்திகள்6 hours ago

ஊக்கத்தொகை ரூ. 50,000-லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்வு!!..

இந்தியா7 hours ago

யோகிபாபுவுக்கு அடித்த லக்! மூன்று மொழிகளில் ரிலீஸாகும் ‘பன்னிக்குட்டி’

இந்தியா8 hours ago

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு மத்திய அமைச்சர் வாழ்த்து

இந்தியா8 hours ago

ஸ்பாவில் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 40 பேர்..!!

இந்தியா8 hours ago

மனைவியை பொறிவைத்து பிடித்த கணவன் – சிக்கிய போலீஸ்..!!

குற்றம்8 hours ago

ரயில் மோதி உயிரிழந்த யானையின் வயிற்றில் 4 மாத கரு..!!

அரசியல்9 hours ago

நவம்பர் 29-ல் வேளண் சட்டங்கள் ரத்து: டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு!

செய்திகள்9 hours ago

தத்து கொடுக்கப்பட்ட குழந்தை..!! மீண்டும் குழந்தையை கேட்ட தாய்..!!

செய்திகள்1 month ago

அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

ஈரோடு3 weeks ago

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

கள்ளக்குறிச்சி2 months ago

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

காஞ்சிபுரம்2 weeks ago

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கன்னியாகுமரி1 month ago

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !அதிரடி அறிவிப்பு!

சிவகங்கை1 month ago

அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

செய்திகள்2 months ago

பிக் நியூஸ்! தமிழகத்தில் 11 நாட்கள் தொடர் விடுமுறை!

சினிமா2 months ago

கவிஞர் பிறைசூடன் கடந்து வந்த பாதை!

செய்திகள்1 month ago

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

இந்தியா2 weeks ago

ரூ1000 வெள்ள நிவாரணத் தொகை!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

Trending